ஏற்காடு மலைப்பாதையில் கிடந்த ஆண் பிணம்! வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

ye1202P1ye2912P2

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி சேலத்தில் இருந்து குப்பனுர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதை அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது.  இந்த வழக்கை இது வரை ஏற்காடு காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் வழக்கின் விசாரணை மந்த நிலையில் இருந்ததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி. துறையினருக்கு மாற்றப்பட்டது. இன்று சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. பெருமாள் தலைமையிலான குழுவினர் ஏற்காடு காவல் நிலையத்தில் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும், ஆதாரங்களையும் கைப்பற்றினர்.

-நவீன் குமார்.