பிப்ரவரியில் சரக்கு மற்றும் சேவைவரி வருவாய் ரூ.1,68,337 கோடியாக அதிகரித்தது; 12.5 சதவீத ஆண்டு வளர்ச்சியை எட்டியுள்ளது .

பிப்ரவரி 2024-ல் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,68,337 கோடியாக இருந்தது. இது 2023-ல் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 12.5 சதவீதம் அதிகமாகும்.

பிப்ரவரி 2024 சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் விவரம்:

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி): ரூ.31,785 கோடி

மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி): ரூ.39,615 கோடி

ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி): இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 38,593 கோடி உட்பட ரூ .84,098 கோடி

செஸ்: இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 984 கோடி உட்பட ரூ. 12,839 கோடி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 9,713 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் 11 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ. 8,774 கோடி வருவாய் கிடைத்தது.

திவாஹர்

Leave a Reply