தேசிய பிறப்பு குறைபாடு விழிப்புணர்வு 2024-ஐ நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தொடங்கினார் .

பிரதமரின் ஜன் ஆரோக்கியத் திட்டம் என்பது இந்தியாவின் ஆரோக்கியத்தில் பாதியை உள்ளடக்கிய ஒரு முக்கியத் திட்டமாகும், மேலும் இது தற்போதுள்ள தேசிய குழந்தை சுகாதாரத் திட்டத்துடன் குழந்தை ஆரோக்கியத்திலும் கருவியாக இருக்கும்” என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், மத்திய  சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வா சந்திரா முன்னிலையில் தெரிவித்தார். தேசிய பிறப்பு குறைபாடு விழிப்புணர்வு மாதம் 2024-ஐ இன்று அவர் தொடங்கி வைத்தார்.

இந்த தேசிய பிறப்பு குறைபாடு விழிப்புணர்வு மாதத்தின் கருப்பொருள் 2024  “தடைகளை உடைத்தல்: பிறப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான உள்ளடக்கிய ஆதரவு”. பிறப்பு குறைபாடுகளை தடுத்தல், ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பால், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கிரியா ஊக்கியாக விளங்கும் தேசிய குழந்தைகள் சுகாதார திட்டத்தைப் பாராட்டினார். இந்தத் திட்டத்தின் கீழ், 160 கோடி குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார். நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஆரம்ப நிலை தலையீட்டுக் குழுக்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், ஆர்.பி.எஸ்.கே திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உள்நாட்டுப் பகுதிகளை சென்றடைய வேண்டும் என அவர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply