புதிய சந்தைகளுக்கு வேளாண் ஏற்றுமதியை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் எளிதாக்கியுள்ளது, பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் கவனம் செலுத்துகிறது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) இந்தியாவில் இருந்து வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இறைச்சி வகைகள் போன்ற முன்னுரிமை தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஒரு சில தயாரிப்புகளை நம்பியிருப்பதைக் குறைத்து, மதிப்புச் சங்கிலியை உயர்த்துகிறது. ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா போன்ற முக்கியச் சந்தைகளில் விரிவாக்கத்தை மையமாகக் கொண்டு, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் அதன் தயாரிப்புகளை சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தத்  திட்டமிட்டுள்ளது. இதற்காக, உலகளாவிய பல்பொருள் அங்காடிகளுடன் சிறிய கூட்டாண்மைகளை உருவாக்குவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம், கடல் நெறிமுறைகளை நிறுவுவதன் மூலம், தளவாடச் செலவுகளைக் குறைக்க இந்த அமைப்பு முயற்சித்து வருகிறது. இந்த உத்திசார் முன்முயற்சிகள் போட்டித்தன்மையை மேம்படுத்துவதன் மூலமும், நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது.  

மேலும், ஸ்ரீஅன்னா எனப்படும் சிறுதானியங்களை ஊக்குவிப்பதற்கான ஆணையத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் ஆரோக்கியமான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உணவு நிலப்பரப்பை வளர்ப்பதற்கான அரசின் பார்வையுடன் எதிரொலிக்கின்றன. கடந்த ஆண்டு முழுவதும், சர்வதேச சிறுதானியங்கள்-2023 ஆண்டில் ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தி, ஸ்ரீ அன்னா முத்திரையின் கீழ் பரந்த அளவிலான மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளின் வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பை நோக்கி ஆணையம் விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளது.

இந்த உத்திபூர்வ முயற்சி பாஸ்தா, நூடுல்ஸ், காலை உணவு தானியங்கள், ஐஸ்கிரீம், பிஸ்கட், ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தது.

2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், ஈராக், வியட்நாம், சவுதி அரேபியா மற்றும் இங்கிலாந்து போன்ற முக்கிய சந்தைகளுக்கான ஏற்றுமதியை ஆணையம் எளிதாக்கியது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிசமான வளர்ச்சியை அது பெற்றுள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் முக்கிய சந்தைகளில் இந்திய விவசாய பொருட்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஏற்றுமதியாளர்களிடமிருந்து வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில், துருக்கி, தென் கொரியா, கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் புதிய கண்காட்சிகளில் பங்கேற்பதற்கான தொடக்கத்தை ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இந்த செயலூக்கமான அணுகுமுறை அதிகச் சந்தை அணுகலை எளிதாக்குவதையும், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply