தில்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மக்கள் தொடர்பியல் மாணவிகளுடன் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி இன்று கலந்துரையாடினார். அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் நீடித்த நகர்ப்புற குடியிருப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நகர்ப்புறத் துறையில் அதிகரித்துள்ள செலவினங்களை சுட்டிக்காட்டிய அமைச்சர், தொழில்நுட்பம், புதியக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி இது மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ள அதே நேரத்தில், சில விவகாரங்களில் பணிகள் நடைபெற்று வருவதையும் குறிப்பிட்டார். நகர்ப்புறங்களில் முதலீடு 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது. இது 2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ரூ.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று திரு பூரி கூறினார். நகரங்கள் பொருளாதார வளர்ச்சியின் மையங்களாக உள்ளன என்று கூறிய அவர், கழிவுப் பதப்படுத்துதல், நகர்ப்புற இயக்கம், மலிவு விலையில் வீட்டுவசதி ஆகியவற்றில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் குறித்து பகிர்ந்து கொண்டார். நாடு முழுவதும் பயணிக்கும் போது நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றத்தை கவனிக்குமாறு இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
திவாஹர்