பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், பாதுகாப்புப் படையினரின் திறன் மேம்பாடு, வலிமைக்கு மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய மின்னணுக் கழக நிறுவனம், அணு சக்தித் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை உள்நாட்டிலேயே இரண்டு வெவ்வேறு வகையிலான வெடிபொருளை கண்டறியும் கருவிகளை உருவாக்கியுள்ளன.
இதனை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர், பேராசிரியர் அஜய் குமார் சூட் அண்மையில் புலனாய்வுத் துறை இயக்குநரிடம் ஒப்படைத்தார். இவை 12 பாதுகாப்பு முகமைகளிடம் புலனாய்வுத் துறை மூலம் அளிக்கப்படும். தற்சார்பு இந்தியாவின் வெற்றிகரமான தயாரிப்புக்கு இது சிறப்பான எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா