இந்தியாவில் உள்ள மற்ற மத்திய துணை ராணுவப் படைகளுடன் ஒப்பிடும்போது ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண் பணியாளர்களின் விகிதம் -9% உள்ளது .

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) இந்தியாவில் ரயில்வே பாதுகாப்புத் துறையில் ஒரு முதன்மை பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனமாகும். ரயில்வே சொத்துக்களின் சிறந்த  பாதுகாப்பிற்காக 1957 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இப்படை பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உள்ளடக்கியப் பணிகளை மேற்கொள்கிறது.

அன்பு, கவனிப்பு, வலிமை மற்றும் நித்தியத்தின் அடையாளங்களாக பெண்களை அங்கீகரித்து, ரயில்வே பாதுகாப்புப் படை தற்போது இந்தியாவில் உள்ள மத்திய துணை ராணுவப் படைகளில் பெண் பணியாளர்களின் மிகப்பெரிய பங்கைக் கொண்டு (9%) அவர்களைப் பெருமைப்படுத்துகிறது. பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், துன்பத்தில் உள்ள பெண் பயணிகளுக்கு உதவி வழங்குவதற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற அவர்கள் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை ஊக்குவிப்பதற்கும், பெண் பணியாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், ரயில்வே பாதுகாப்புப் படை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது:

உள்கட்டமைப்பு மேம்பாடுகள் – ரயில் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரிகளின் சிறப்புத் தேவைகளுக்காக அறைகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் பிற வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்தல் – பெண் பணியாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து மண்டலங்கள் / பிரிவுகளிலும் பெண் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமித்தல், அவர்களின்  கோரிக்கைகள் கவனிக்கப்படுவதை உறுதி செய்தல் மற்றும் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.

“பெண்கள் பாதுகாப்பு” முன்முயற்சி -இந்திய ரயில்வே கட்டமைப்பு முழுவதும் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, நீண்ட தூர ரயில்களில் தனியாக அல்லது சிறார்களுடன் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, இந்திய ரயில்வே முழுவதும் தினமும் சராசரியாக 400 க்கும் மேற்பட்ட ரயில்களில் சராசரியாக 230 குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

பெண்கள் பெட்டிகளில் அத்துமீறி முறையற்ற முறையில் பயணிக்கும் நபர்களைக் கைது செய்வதில் இந்தக் குழுக்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன, இது பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்கிறது.

2023 ஆம் ஆண்டில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த 77839 ஆண்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் மாத்ரிசக்தி-ஆர்.பி.எஃப் பணியாளர்கள், குறிப்பாக பெண் அதிகாரிகள், தங்கள் ரயில் பயணங்களின் போது பிரசவத்திற்கு செல்லும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுகின்றனர். 2023-ம் ஆண்டில் மட்டும், ரயில்வே பாதுகாப்புப் படையின் பெண் பணியாளர்கள் 206 பிரசவங்களுக்கு உதவியுள்ளனர்.

மனித கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை:  பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மனிதக் கடத்தலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மனித கடத்தலுக்கு எதிராக நடவடிக்கையில் 2023-ம் ஆண்டில், 1048 நபர்கள் 257 கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டனர்,.

குழந்தை செல்வங்கள் மீட்பு –  குழந்தைகளை மீட்பதற்கான தீவிர இயக்கத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில், 3973 பெண் குழந்தைகள் ஆர்பிஎஃப் ஆல் மீட்கப்பட்டனர்.

ஆபரேஷன் டிக்னிட்டி- பெண்கள் உட்பட பெரியவர்களை மீட்பதில் ஆர்.பி.எஃப் பெண் பணியாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஓடிப்போனவர்கள், கைவிடப்பட்டவர்கள், போதைக்கு அடிமையானவர்கள், ஆதரவற்றவர்கள் அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் என 2023-ம் ஆண்டில், சுமார் 3492 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த செயல்பாடுகள் மற்றும் முயற்சிகள் மூலம், ஆர்.பி.எஃப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அனைவருக்கும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய ரயில்வே சூழலை உருவாக்குவதில் பெண்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளையும் நிரூபிக்கிறது. ஆர்.பி.எஃப் இல் உள்ள பெண்கள் அதிகாரமளித்தலின் அடையாளங்கள் மட்டுமல்ல; அவர்கள் வலிமை, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாகும், இந்தியா முழுவதும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.

எம்.பிரபாகரன்

Leave a Reply