இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் லடாக்கில் பிரதமரின் ஜன் விகாஸ் காரியாக்ரம் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட புத்தமத மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அடிக்கல் நாட்டினார் .

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் லடாக் யூனியன் பிரதேசத்திலும் பிரதமரின் ஜன் விகாஸ் காரியாக்ரம் திட்டத்தின் கீழ் புத்த மத மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ .225 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 38 திட்டங்களுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

தற்போதைய அரசின் ‘பாரம்பரியத்துடன் பரிணாமம்’ மற்றும் ‘பாரம்பரியத்தை ஊக்குவித்தல்’ என்ற கருத்தின் அடிப்படையில், கல்விசார் ஒத்துழைப்பு, ஆராய்ச்சியை ஊக்குவித்தல், மொழி பாதுகாப்பு, பிரதிகளின் மொழிபெயர்ப்பு மற்றும் பௌத்த மக்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்காக தில்லி பல்கலைக்கழகத்தின் பௌத்த ஆய்வுகளில் மேம்பட்ட ஆய்வுகள் மையத்தை வலுப்படுத்த ரூ .30 கோடி நிதி உதவியை மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அறிவித்தார்.

‘வளர்ச்சி அடைந்த பாரதத்தின்’ நோக்கத்துடன் இணைந்த அமைச்சர்,  பௌத்த ஆய்வுகளுக்கான மத்திய நிறுவனம், தில்லி பல்கலைக்கழகத்தின் பௌத்த ஆய்வுகளுக்கான மேம்பட்ட ஆய்வுகள் மையம் மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், இதனால் பௌத்த கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதோடு நவீன கல்வியும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியுடன், சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் , மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு , சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜான் பர்லா, அந்தந்த மாநிலங்களின் பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடத்தப்பட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply