பாராதீப் துறைமுக ஆணையம் 2023-24-ம் நிதியாண்டில் சாதனை அளவாக 145.38 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதன் மூலம் சமீபத்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தையும் விஞ்சி நாட்டின் மிக உயர்ந்த சரக்கு கையாளும் முக்கிய துறைமுகமாக உருவெடுத்துள்ளது. 56 ஆண்டுகால செயல்பாட்டு வரலாற்றில் முதல் முறையாக, தீன்தயாள் துறைமுகத்தின் முந்தைய சாதனைகளை பாராதீப் துறைமுகம் முறியடித்துள்ளது. பாராதீப் துறைமுகம் ஆண்டு அடிப்படையில் 10.02 மில்லியன் மெட்ரிக் டன் (7.4%) சரக்கு கையாளும் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
இந்த நிதியாண்டில், இத்துறைமுகம் முன்னெப்போதும் இல்லாத அளவாக 59.19 மில்லியன் மெட்ரிக் டன் கடலோர கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.76 மில்லியன் மெட்ரிக் டன், அதாவது 1.30 சதவீதம் வளர்ச்சியாகும். அனல் நிலையங்களுக்கான நிலக்கரி கடலோர கப்பல் போக்குவரத்து 43.97 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது, அதாவது முந்தைய ஆண்டின் சரக்கு கையாளுதலை விட 4.02% அதிகமாகும். இதனால், பாராதீப் துறைமுகம் நாட்டின் கடலோர கப்பல் போக்குவரத்து மையமாக உருவாகி வருகிறது.
பாராதீப் துறைமுகம் அதன் கப்பல் நிறுத்தும் உற்பத்தித் திறனை முந்தைய நிதியாண்டில் இருந்த 31,050 மெட்ரிக் டன்னிலிருந்து 33,014 மெட்ரிக் டன்னாக உயர்த்தி சாதனை படைத்துள்ளது. இது 33 சதவீத வளர்ச்சி ஆகும். பாராதீப் துறைமுகத்தின் உற்பத்தித்திறன் நாட்டின் அனைத்து துறைமுகங்களிலும் மிக உயர்ந்ததாகவுள்ளது. இந்த நிதியாண்டில், துறைமுகம் 21,665 ரேக்குகளைக் கையாண்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டை விட 7.65% வளர்ச்சி ஆகும். இந்த நிதியாண்டில் 2710 கப்பல்களை துறைமுகம் கையாண்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டை விட 13.82% அதிகமாகும்.
இந்த நிதியாண்டில் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக சரக்குகள் கையாளுதலில் அதிகரித்த செயல்திறன் உந்துதலாக உள்ளது.
இந்தத் துறைமுகத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.2,074 கோடியிலிருந்து ரூ.2,300 கோடியைத் தாண்டியுள்ளது. இதன் விளைவாக 14.30% அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ரூ.1,300 கோடியாக இருந்த இயக்க உபரி வருவாய் ரூ.1,510 கோடியைத் தாண்டி 16.44% வளர்ச்சியடைந்துள்ளது.
வரிக்கு முந்தைய நிகர உபரி கடந்த ஆண்டின் ரூ.1,296 கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ.1,570 கோடியைத் தாண்டி 21.26 சதவீதம் வளர்ச்சியைக் காட்டுகிறது.
வரிக்கு பிந்தைய நிகர உபரி வருவாய் கடந்த ஆண்டின் ரூ.850 கோடியுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகரித்து ரூ.1,020 கோடியைத் தாண்டியுள்ளது.
இயக்க விகிதமும் கடந்த ஆண்டு 36%-லிருந்து 37% ஆக மேம்பட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா