உத்தராகண்ட் மாநிலம் சித்தார்கஞ்ச் மாவட்டம் உதம் சிங் நகரில் உள்ள மாநிலத் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் எல்டெகோ, தொழில்துறை பகுதியில், “உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லித்தியம் பேட்டரி மற்றும் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான வணிக ஆலையை அமைப்பதற்கு” அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், ரிமைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் 27 மார்ச் 2024 அன்று புதுதில்லியில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், மொத்த திட்ட செலவான ரூ.15 கோடியில் ரூ.7.5 கோடி நிதி உதவியை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் உறுதியளித்துள்ளது, இது நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மேற்பார்வையை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
நிகழ்ச்சியில் பேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக், “மின்னணுக் கழிவுகள் அதிகரிப்பில் இந்தியா உலகில் 3-வது இடத்தில் உள்ளது. இந்த முயற்சியை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஆதரிப்பது, முறைசாரா மறுசுழற்சியாளர்களை முறையான மறுசுழற்சியாளர்களுடன் இணைக்க உதவும். இதன் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும்.
எஸ்.சதிஸ் சர்மா