பிரதமர் போஷன் திட்டத்தின் விவரங்கள் குறித்து இந்தோனேசியாவின் கடல்சார் வளங்களுக்கான துணை ஒருங்கிணைப்பு அமைச்சர் மேதகு மோச்சமத் ஃபிர்மான் ஹிதாயத்துடன் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் ஒரு சந்திப்பை நடத்தினார். கூடுதல் செயலாளர் திரு ஆனந்த் ராவ் வி.பாட்டீல், திட்ட விவரங்களை குழுவினருடன் பகிர்ந்து கொண்டார். கூடுதல் செயலாளர் திரு விபின் குமார், கல்வி அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆரம்ப கல்விக்கு முந்தைய நிலை முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சூடான சமைத்த உணவு வழங்கப்படுகிறது என்று திரு சஞ்சய் குமார் தெரிவித்தார்.
தங்கள் நாட்டிலும் இதே போன்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து வழிகாட்டுதலை இந்தக் குழுவினர் கோரினர். இந்தத் திட்டம் குறித்து விரிவான கண்ணோட்டத்தை வழங்கிய திரு. சஞ்சய் குமாரிடமிருந்து விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளைப் பெற்றனர்.
இத்திட்டத்தின் நோக்கங்கள், திட்டத்தின் அளவு, திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஏற்பாடுகள், திட்டத்தின் கூறுகள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை எடுத்துரைத்து விளக்கக்காட்சியை திரு பாட்டீல் பகிர்ந்து கொண்டார். திறன் மேம்பாட்டு முன்முயற்சிகள், சமுதாய பங்கேற்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகள், சிறந்த நடைமுறைகள் போன்றவற்றை திரு பாட்டீல் பகிர்ந்து கொண்டார்.
திவாஹர்