இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மார்ச் 31-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு, இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள், ஜனவரி 9-ஆம் தேதியன்று கொழும்பில் முப்படைகளையும் தயார்படுத்தி, தேர்தல் முடிவுகளை அறிவிக்கவிடாமல் நிறுத்திவைத்து, இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி, இராணுவ புரட்சியை உருவாக்க முனைந்தார் என்று மஹிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது அரசியல் அமைப்பின்படி அடிப்படை உரிமை மீறல் செயலாகும் என்று, முன்னிலை சோசலிஸக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-வினித்.