பெங்களுரை தலைமையிடமாக கொண்டு, இந்தியாவில் 24 மாநிலங்களில் செயல்பட்டு வரும் உஜ்ஜீவன் நிறுவனம். வறுமைக் கோட்டுக்கும் கீழ் வாழ்ந்து வரும் ஏழைமக்களின் வாழ்க்கைத்தரத்தையும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 423 கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் இருபத்தொரு லட்சத்து பதினெட்டாயிரத்து எந்நூற்றி ஐம்பத்தி மூன்று வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிறுவனம் கடனுதவி வழங்குவதோடு தன் பணியை நிறுத்திக் கொள்ளாமல், கிராமப்புறங்களில் பல்வேறு சமூகப் பொதுப் பணிகளையும் தொடர்ந்து ஆற்றி வருகிறது.
அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழமுல்லக்குடி கிராமத்தில் உள்ள, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கோரிக்கையை ஏற்று, அக்கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடத்தை உஜ்ஜீவன் நிறுவனம் இலவசமாக கட்டிக்கொடுத்துள்ளது.
அக்கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (20.02.2015) மதியம் 12.30 மணியளவில் கீழமுல்லக்குடி கிராமத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் உஜ்ஜீவன் நிறுவனத்தின் கிளைமேலாளர் அழகேசன் வரவேற்புரை ஆற்றினார்.
திருவெறும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ், உள்ளாட்சித் தகவல் இணைய ஊடகத்தின் நிறுவனரும், ஆசிரியருமான டாக்டர் துரைபெஞ்சமின் ஆகியோர், இலவச கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இவ்விழாவில் உதவி கல்வி அலுவலர் புளோரா ஆரோக்கிய மேரி, கூடுதல் கல்வி அலுவலர் ஜேஸ்ரா பிரவின், கீழமுல்லக்குடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்சாராள், ஐசிஐசிஐ வங்கியின் கிளைமேலாளர் பாலாஜி சிங்காரம், உஜ்ஜீவன் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஜாக்குலின்மேரி, காணிக்கைமேரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு உரையாற்றினர்.
விழாவின் முடிவில் உஜ்ஜீவன் நிறுவனத்தை சேர்ந்த பிரபாகரன் நன்றி கூறினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைப்பெற்றது.
-சி.மகேந்திரன்.