பிப்ரவரி மாதத்தில் இபிஎப்ஓ 15.48 லட்சம் நிகர உறுப்பினர்களை சேர்த்துள்ளது.

பிப்ரவரியில் 7.78 லட்சம் புதிய உறுப்பினர்கள் இபிஎப்ஓ-வில் சேர்ந்துள்ளனர்

இபிஎப்ஓ -வின் தற்காலிக ஊதிய தரவு  ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. 2024 பிப்ரவரி மாதத்தில் இபிஎப்ஓ 15.48 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது.

2024 பிப்ரவரியில் சுமார் 7.78 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தரவு சுட்டிக்காட்டுகிறது. தரவுகளின் குறிப்பிடத்தக்க அம்சம் 18-25 வயதுக்குட்பட்டவர்களின் ஆதிக்கம் ஆகும். இது பிப்ரவரியில்  சேர்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்க 56.36 % ஆகும். இது ஒழுங்கமைக்கப்பட்ட பணியாளர்களில் சேரும் பெரும்பாலான நபர்கள் இளைஞர்கள்முதன்மையாக முதல் முறையாக வேலை தேடுபவர்கள் என்பதைக் குறிக்கிறது.

ஏறக்குறைய 11.78 லட்சம் உறுப்பினர்கள் வெளியேறி பின்னர் மீண்டும் இபிஎப்ஓ-வில் சேர்ந்தனர் என்பதை ஊதிய தரவு எடுத்துக்காட்டுகிறது. இந்த உறுப்பினர்கள் தங்கள் வேலைகளை மாற்றிஇபிஎப்ஓ-வின் கீழ் உள்ள நிறுவனங்களில் மீண்டும் சேர்ந்தனர். இறுதி தீர்வுக்கு விண்ணப்பிப்பதற்குப் பதிலாக தங்கள் திரட்டல்களை மாற்றுவதைத் தேர்ந்தெடுத்தனர். இதனால் நீண்டகால நிதி நல்வாழ்வைப் பாதுகாத்து அவர்களின் சமூகப் பாதுகாப்பை நீட்டித்தனர்.

ஊதிய தரவுகளின் பாலின வாரியான பகுப்பாய்வு7.78 லட்சம் புதிய உறுப்பினர்களில்சுமார் 2.05 லட்சம் பேர் புதிய பெண் உறுப்பினர்களாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. மேலும்இந்த மாதத்தில் நிகர பெண் உறுப்பினர் சேர்க்கை சுமார் 3.08 லட்சமாக இருந்தது. பெண் உறுப்பினர் சேர்க்கை என்பது மிகவும் உள்ளடக்கிய மற்றும் மாறுபட்ட பணியாளர்களை நோக்கிய பரந்த மாற்றத்தைக் குறிக்கிறது.

பணியாளர் பதிவைப் புதுப்பிப்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருப்பதால்தரவு உருவாக்கம் ஒரு தொடர்ச்சியான பயிற்சியாக இருப்பதால் மேலே உள்ள ஊதிய தரவு தற்காலிகமானது. எனவே முந்தைய தரவு ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும்.

திவாஹர்

Leave a Reply