ஐஐடி மெட்ராஸின் 65-வது நிறுவன நாள் கொண்டாட்டத்தில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சாதனை மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) 65-வது நிறுவன நாள் இன்று (20 ஏப்ரல் 2024) மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பம்சமாக கடந்த ஆண்டில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், தற்போதைய மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.

தேசிய அளவில் நிறுவனங்களின் தரவரிசைக் கட்டமைப்பின் (NIRF) தரவரிசையில் முதலிடத்தைப் பெற்று, ‘ஒட்டுமொத்த’ பிரிவில் 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலாவது இடத்தையும், பொறியியல் பிரிவில் 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலாவது இடத்தையும் பெற்றிருப்பது இக்கல்வி நிறுவனத்தின் மிகப் பெரிய சாதனையாகும். இந்த தரவரிசையில் ‘ஆராய்ச்சி’ மற்றும் ‘கண்டுபிடிப்புகள்’ பிரிவுகளில் இரண்டாவது இடத்தையும் இக்கல்வி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இண்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ ஏர்லைன்ஸ்) இயக்குநர்கள் குழுத் தலைவரும், செலரிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைவருமான டாக்டர் வி.சுமந்திரன் இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். டாக்டர் வி.சுமந்திரன் 1981-ம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் படித்த முன்னாள் மாணவர் என்பதுடன், ஐஐடி மெட்ராஸ்-ன் புகழ்பெற்ற முன்னாள் மாணவராவார்.

டாக்டர் சுமந்திரன் வணிக நிறுவனத்தின் தலைவர், தொழில்நுட்ப வல்லுநர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகத் திறமையுடன் தனித்துவம் மிக்கவராகத் திகழ்ந்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் வசித்தும் பணிபுரிந்தும் வருகிறார். ஏராளமான நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் இடம்பெற்ற அவர், மோட்டார் வாகனங்கள், தொழில்நுட்பம், தொழில்துறைக்கான உபகரணங்கள், விண்வெளித் துறை போன்ற பல்வேறு பார்ச்சூன்-100 நிறுவனங்களுக்கு ஆலோசராகப் பணியாற்றி இருக்கிறார்.

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி ஆய்வகங்களில் 16 ஆண்டு காலம் பணியாற்றி வந்த டாக்டர் சுமந்திரன், ஜிஎம்ஃபியட் அலையன்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநராக ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். திரு. ரத்தன் டாடா அவர்களின் அழைப்பின்பேரில் இந்தியாவிற்கு திரும்பிய அவர் 2001-ல் டாடா மோட்டார்ஸ் கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றத் தொடங்கினார். முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் டாடா இண்டிகா, டாடா இண்டிகோ போன்ற கார்களின் உற்பத்தியைத் தொடங்கி பயணிகளுக்கான கார் வணிகத்தில் வளர்ச்சிக்கு வித்திட்டார். இதன் மூலம் அந்நிறுவனம் மோட்டார் வாகன உற்பத்தி நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி கண்டது.

இந்நிகழ்வின்போது ஏராளமான அங்கீகரிப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

“கற்பித்தலில் சிறந்து விளங்குவோருக்கான ஸ்ரீமதி மார்டி அன்னபூர்ணா குருநாத் விருது” இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் டாக்டர் ஷாலிகிராம் திவாரி, மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் ஜோ தாமஸ் கரக்காட்டு ஆகியோர் 2023-24ம் ஆண்டிற்கு கூட்டாகத் தேர்வு செய்யப்பட்டனர். இந்த விருது ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரும், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பேராசிரியர் மார்டி சுப்ரமணியம் அவர்களின் கல்வி உதவித் தொகையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2013-14ம் ஆண்டில் கல்வி நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விருதுகள் (IRDA) அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆரம்பகால தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விருது ரூ.25 லட்சம் மானியத்துடன் பின்வரும் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

  • பேராசிரியர் அனுபப் ராய் – அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் உயிரி மருத்துவப் பொறியியல் துறை
  • பேராசிரியர் தாரக் குமார் பத்ரா – வேதியியல் பொறியியல் துறை

மத்தியகால தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விருது ரூ.40 லட்சம் மானியத் தொகையுடன் பின்வரும் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

  • பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம்- மின் பொறியியல் துறை
  • பேராசிரியர் பசவராஜ் மடிவாலா குரப்பா- ரசாயனப் பொறியியல் துறை

2024-ம் ஆண்டுக்கான சிறந்த முன்னாள் மாணவர் விருது பெற்றவர்கள்:

(நிறுவன நாளில் சிறந்த முன்னாள் மாணவர் விருதினை நேரில் பெற்றுக் கொண்ட விருதாளர்கள்)

  1. கிரிதர் அரமனே, இந்திய பாதுகாப்புத் துறை செயலாளர் [1986/எம்டி/எம்ஸ்]
  2. பேராசிரியர் எஸ்.சந்திரசேகர், பேராசிரியர், புர்டியூ பல்கலை, அமெரிக்கா [1981/பிடி/எம்இ]
  3. டாக்டர் கங்கிடி மதுசூதன் ரெட்டி, தலைசிறந்த அறிவியலாளர்- இயக்குநர், டிஎம்ஆர்எல், டிஆர்டிஓ, இந்தியா [1999/பிஎச்டி/எம்டி]
  4. திருமதி மிலி மஜும்தார், நிர்வாக இயக்குநர், கிரீன் பில்டிங் கவுன்சில் ஆஃப் இந்தியா, மூத்த துணைத் தலைவர் யுஎஸ் கிரீன் பில்டிங் கவுன்சில், இந்தியா [1992/எம்டி/சிஇ]
  5. திரு சங்கரன் நரேன், செயல் இயக்குநர்- தலைமை முதலீட்டு அதிகாரி, ஐசிஐசிஐ புருடென்சியல் ஏஎம்சி லிட், இந்தியா [1987/பிடி/எம்இ]
  6. திரு. வெங்கட் ரங்கன், சிடிஓ, கிளாரி இன்க்., யுஎஸ் [1981/பிடி/எம்இ]

(விருதுகளை நேரடியாக பெற இயலாத விருதாளர்கள்)

  1. பேரா. அனிமா அனந்தகுமார், பிரேன் பேராசிரியர் கால்டெக், சீனியர் டைரக்டர் ஏஐ ரிசர்ச் என்விடியா [2004/பிடி/இஇ]
  2. பேரா. வினோத் வைகுண்டநாதன், பேராசிரியர் எம்ஐடி, இணை நிறுவனர்- தலைமை கிரிப்டோகிராபர் டியுலாட்டி டெக்னாஜிஸ் [2003/பிடி/சிஎஸ்]
  3. டாக்டர் உன்னிகிருஷ்ணன் நாயர், இயக்குநர், இயக்குநர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் [2011/பிஎச்டி/எம்இ]
  4. டாக்டர் பழனிவேல் வீரமுத்துவேல், திட்ட இயக்குநர், சந்திரயான் 3, இஸ்ரோ [2016/பிஎச்டி/எம்இ]
  5. பேரா. சௌந்தர் குமரா, ஆலன், இ அண்ட் எம், பியர்ஸ் பேராசிரியர், பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம் [1977/எம்டி/ஐஎம்]
  6. பேரா. வெங்கட்ராமன் கோபாலன், பேராசிரியர், பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம் [1989/பிடி/எம்டி]
  7. பேரா. கரன் ஷேர் சிங், பேராசிரியர், டொரோன்டோ பல்கலை, வீட்டா டிஜிட்டல், இணை நிறுவனர் ஜாலி ரிசர்ச், ஜானுஸ்வி ஆர் [1991/பிடி/சிஎஸ்]
  8. டாக்டர் ஜிடிஎஸ் ராம்குமார், பொறியியல் பிரிவு தலைவர், ஆப்பிள் இன்ஃபோ ஆப்ஸ், ஆப்பிள் இன்க். [1990/பிடி/சிஎஸ்]

2021-ம் ஆண்டுக்கான சிறந்த முன்னாள் மாணவர் விருது பெற்றவர்:

  1. திரு. பிரசன்னா ராமஸ்வாமி, இசைக்கலைஞர், வர்ஜினியா, யுஎஸ்ஏ [1992/பிடி/ஓஇ] [இந்த ஆண்டு நேரில் வந்து விருதைப் பெற்றுக் கொண்டார்]

சாஸ்த்ரா (ஐஐடிஎம்-ன் வருடாந்திர தொழில்நுட்ப விழா) 2024 மற்றும் சாரங் (ஐஐடிஎம்-ன் வருடாந்திர கலாச்சார விழா) 2024 ஆகிய குழுக்கள் இணைந்து நடப்பாண்டில் ரூ.3,00,000 நன்கொடை திரட்டியுள்ளன. நன்கொடையாகப் பெறப்பட்ட தொகை கீழ்க்காணும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது.

  1. தீபம் டிரஸ்ட், சென்னை- ரூ.1,00,000
  2. ஊனமுற்றோருக்கான ஐக்கிய அனாதை இல்லம், கோவை- ரூ.1,00,000
  3. டைஸ் தெட் பைண்ட் பவுண்டேஷன் சென்னை- ரூ.1,00,000

நிகழ்வின்போது பின்வரும் விருதுகள்/அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன

  1. இன்ஸ்டிடியூட் ப்ளூஸ்- மாணவர்கள்
  2. கல்வி விருதுகள்- மாணவர்கள்
  3. கற்பித்தலில் சிறந்து விளங்குதல்- ஆசிரியர்
  4. கல்விசாராப் பணியாளர் அங்கீகார விருதுகள்
  5. எச்ஓடி/டீன்/ஆலோசகர் போன்ற பதவிகளை நிறைவு செய்து வெளியேறும் அதிகாரிகள்
  6. வெளியேறிச் செல்லும் மாணவர்கள் நிர்வாகப் பிரிவு

எம்.பிரபாகரன்

Leave a Reply