ஜெ.ஜெயலலிதா வங்கிக் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு பணப்பரிவர்த்தனை நடந்ததற்கு ஆதாரம் உள்ளதா? சசிகலா ஜெ.ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?- அரசு வழக்கறிஞர் பவானி சி்ங்கிடம், நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி சரமாரி கேள்வி!

Hon'ble Mr. Justice Chikka Rachappa Kumaraswamy

Hon’ble Mr. Justice Chikka Rachappa Kumaraswamy

Untitled

COURT.docx kar

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கின் வாதம் இன்று (25.02.2015) காலை தொடங்கியது.

அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்.

ஜெ.ஜெயலலிதா வங்கிக் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு பணப்பரிவர்த்தனை நடந்ததற்கு ஆதாரம் உள்ளதா? எந்தெந்த தேதியில் எவ்வளவு பண பரிவர்த்தனை நடந்தது என்பதற்கு விளக்கம் தாருங்கள் என்று, அரசு வழக்கறிஞர் பவானி சி்ங்கிடம், நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

மேலும், சசிகலா உள்பட 3 பேர் ஜெ.ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா? என்றும் கேள்வி எழுப்பினார்.

நீதிபதி குமாரசாமியின் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in