மண்டல விளையாட்டு போட்டி : மேல்பென்னாத்தூர் பள்ளி மாணவன் சாதனை!

P1030965P1030959

மண்டல அளவிலான நடந்த விளையாட்டு போட்டியில் மேல்பென்னாத்தூர் பள்ளி மாணவன் சிறப்பிடம் பெற்றதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு அரங்கில் உலக திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டது.

இவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு  போட்டிகள் கடலுரில்  நடைபெற்றது.

செய்யாறு, திருப்பத்தூர், வேலூர், விருதாச்சலம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய கல்வி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் க.பவுன்குமார் திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடந்த 100 மீட்டர், 200 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் முதலிடம் பிடித்தார்.

பின்னர் மண்டல அளவிலான விளையாட்டு  போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவன் க.பவுன்குமாரை வணிகவரி மற்றும் பத்திரவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பாராட்டி சான்றிதழ் மற்றும் ரூ.6000/-க்கான காசோலை வழங்கினார். உடன்  கடலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.

இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் செங்கம் ஒன்றியம், மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் க.பவுன்குமாரை பாராட்டி வாழ்த்தினார்.

தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி, உடற்கல்வி ஆசிரியர் மா.சரவணக்குமார், ஆசிரியர்கள் சா.வேல்முருகன், த.சங்கீதா, கு.தனலெட்சுமி, ச.நாரயணன், பூ.ஜோதி, ரேகா அமலி,ஜெரினா, மகேஸ்வரி, உ.இராமாபுரம் தலைமை ஆசிரியர் ஜா.குணசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

 -செங்கம் சரவணக்குமார்.