நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2015 – 2016-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் சார்பில், வெளிநாடுகளில் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு 9,107 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில், இதற்கென 7,234.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 61 சதவீதம், வெளிநாடுகளுக்கான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பூட்டானுக்கு, 6,160.20 கோடி ரூபாவும், ஆப்கானிஸ்தானுக்கு, 676 கோடி ரூபாவும், இலங்கைக்கு 500 கோடி ரூபாவும், மாலைதீவுக்கு 183 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-எஸ்.சதிஸ்சர்மா.