புதுதில்லியில் கனிஜ் பிதேஷ் இந்தியா நிறுவனத்தின் (கபில்) பதிவு அலுவலகத்தை சுரங்கத் துறை செயலாளர் திறந்து வைத்தார்.

கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட்  (கபில்) நிறுவனத்தின் பதிவு  அலுவலகத்தை சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ் இன்று புதுதில்லி, சன்சாத் மார்க்கில் திறந்து வைத்தார்.

சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத் துறை நிறுவனங்களான நால்கோ, எச்.சி.எல் மற்றும் எம்.இ.சி.எல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கபில் நிறுவனம், வெளிநாடுகளில் முக்கியமான கனிம சொத்துக்களை அடையாளம் காணுதல், ஆராய்தல், கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் என்ற முக்கியமான பணியை மேற்கொள்கிறது.

சுரங்கத் துறை செயலாளர் தனது தொடக்க உரையில், தில்லியில் கபில் அலுவலகம் தொடங்கப்பட்டிருப்பது, இந்தியாவின் கனிமப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒருங்கிணைந்த முயற்சிகளின் புதிய சகாப்தத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டார். சிறப்புக்கான உறுதியான அர்ப்பணிப்புடன், “மேக் இன் இந்தியா” மற்றும் “வளர்ந்த பாரதம்” ஆகியவற்றின் நோக்கங்களுடன் ஒத்துப்போகும் முக்கியமான  கனிமங்களின் துறையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தன்னிறைவை இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்க கபில் தயாராக உள்ளது.

கடந்த ஜனவரி 15 அன்று ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது  கபிலின்  பயணத்தில் ஒரு முக்கிய படியாகும். இந்த ஒப்பந்தம் அர்ஜென்டினாவில் உள்ள ஐந்து லித்தியம் தொகுதிகளுக்கான பிரத்யேக ஆய்வு உரிமைகளை கபிலுக்கு வழங்கியது, மின்சார வாகனங்கள் உட்பட பல்வேறு தொழில்களுக்கு அவசியமான பேட்டரிகளின் உற்பத்தியில் முக்கிய அங்கமான லித்தியத்தின் நிலையான விநியோகத்தைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

ஜி2ஜி புரிந்துணர்வு ஒப்பந்தம் (சுரங்க அமைச்சகம் மற்றும் டிஎஸ்ஐஆர் இடையே) மற்றும் கபில் மற்றும் சிஎம்ஓ இடையே கையெழுத்திட்டதன் மூலம் லித்தியம் (உலகின் முன்னணி உற்பத்தியாளரில் சுமார் 47%) மற்றும் கோபால்ட் (உலகின் 4வது பெரிய உற்பத்தியாளரில்  சுமார் 3%) ஆகியவற்றுடன் இந்தியா ஒத்துழைப்பு உள்ளது. லித்தியம் மற்றும் கோபால்ட்டின் ஐந்து திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, அங்கு திட்ட சாத்தியக்கூறுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதுதில்லியில் கபில் பதிவு அலுவலகத்தைத் திறப்பது ஒரு பெரிய முன்னேற்றமாகும், இது இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அத்தியாவசிய தாதுக்களின் நிலையான விநியோகத்தைப் பெறுவதற்காக கபிலின் திறமையான மற்றும் விரைவான செயல்பாட்டை எளிதாக்கும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply