மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது 250-வது தினத்தை இன்று கொண்டாடியது.

மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனம் அதன் 250-வது நிறுவன தினத்தை இன்று (14.05.2024) கொண்டாடியது. இந்தத் தினத்தை முன்னிட்டு, மும்பையில் பாதுகாப்புத் துறைச்  செயலாளர் திரு கிரிதர் அரமனே தலைமையில் தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பாதுகாப்புத் துறைச் செயலாளர் தமது உரையில், மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனம் இந்தியாவின் விலைமதிப்பற்ற சொத்து என்று குறிப்பிட்டார். இது கடற்படை மற்றும் வணிக நோக்கங்களுக்கான திறன்களை மேம்படுத்துவதாக அவர் கூறினார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு இந்நிறுவனம் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியின் போது ‘வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் கப்பல் கட்டுதலின் எதிர்காலம்’ என்ற தொழில்நுட்ப கருத்தரங்கையும் திரு கிரிதர் அரமனே தொடங்கி வைத்தார். மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் 250-வது ஆண்டை நினைவுகூரும் வகையில், ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட ஒரு நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply