தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்தங்களுக்கான காப்பீட்டு உறுதிப் பத்திரங்களை செயல்படுத்துவது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதுதில்லியில் ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்தது. காப்புறுதி உறுதிப் பத்திரங்களின் அமலாக்கத்தை ஆய்வு செய்வது மற்றும் தொடர்புடையவர்களை பங்கேற்கச் செய்ய ஊக்குவிப்பது ஆகியவை இந்தப் பயிலரங்கின் நோக்கமாகும். இந்தப் பயிலரங்கில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உறுப்பினர் (நிதி) திரு ராஜேந்திர குமார் உரையாற்றினார். இந்த பயிலரங்கில் பல்வேறு மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகள், காப்பீட்டு நிறுவனங்கள், இந்திய நெடுஞ்சாலை செயல்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் நிதி அமைச்சகம், அனைத்து அரசு கொள்முதல்களுக்கும் வங்கி உத்தரவாதங்களுக்கு இணையாக காப்பீட்டு உறுதிப் பத்திரங்களை உருவாக்கியுள்ளது. ஏலப் பாதுகாப்பு மற்றும் / அல்லது செயல்திறன் உறுதிப் பத்திரத்தை சமர்ப்பிக்க கூடுதலாக காப்பீட்டு உத்தரவாதப் பத்திரங்களை பயன்படுத்துமாறு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதுவரை 20 செயல்திறன் பத்திரங்களையும், 144 கடன் பத்திரங்களையும் உள்ளடக்கிய 164 காப்பீட்டு உறுதிப் பத்திரங்களைப் பெற்றுள்ளது.
எம்.பிரபாகரன்