காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்கள் ஆகியோர் நேரடியாக கலந்துகொள்ளாமல் ஆன்லைன் வாயிலாக கலந்துகொள்ள வேண்டும் என்று நீர்வளத்துறை செயலாளர் உத்திரவிட்டுள்ளதாக வரும் செய்தி மிகவும் கண்டிக்கதக்கது.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான பரிந்துரைகளை காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வழங்கி வருகிறது. அவர்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில் தான் காவிரி மேலாண்மை ஆணையம் முடிவுகளை எடுக்கிறது. அதோடு காவிரி நீர் முறைப்படுத்துதல் கூட்டத்தில்தான் நேரடியாக அதிகாரிகள் கருத்துகளை கூறமுடியும், தங்கள் மாநிலங்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் விவாதிக்க முடியும்.
மாதம்தோறும் நடைபெறும் இக் கூட்டத்தில் நேரடியாக விவாதிக்காமல் ஆன்லைன் வாயிலாக பங்கேற்றால் எவ்வாறு நம் நிலையை விளக்க முடியும். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி சென்றுவர விமான கட்டண செலவை குறைப்பதற்காக, சிக்கன நடவடிக்கையாக ஆன்லைனில் பங்கேற்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. இச்செயல் விவசாயிகளின் வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதாக அமைகிறது.
மாதாமாதம் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டும் கூட்டத்தில் அனைவரும் கலந்துவரும் நிலையில், காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் நேரடியாக கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஆன்லைன் மூலம் கலந்துகொண்டால் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமலே போய்விடும் அபாயம் உள்ளது.
சிக்கன நடவடிக்கையாக காவிரி நீர் முறைப்படுத்துதல் குழ கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் நேரடியாக டெல்லிக்கு செல்லாமல் ஆன்லைனில் கலந்துகொள்ள உத்திரவிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கதக்கது.
தமிழக அரசு சிக்கன நடிவடிக்கையை நமக்கு சோறுபோடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திலா காட்ட வேண்டும். அரசு அதிகாரிகள் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டதில் நேரடியாக கலந்துகொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்