உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தில் இந்தியா தனது சர்வதேச ஒத்துழைப்பைக் கொண்டாடுகிறது.

உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு, இந்தியா தனது மக்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் உலகளாவிய தலைமையை ஏற்றுக்கொண்ட அசாதாரண டிஜிட்டல் பயணத்தைப் பெருமையுடன் கொண்டாடுகிறது.

இந்திய தொலைத் தொடர்புத் துறை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது, இது  மாறி வரும் சகாப்தத்திற்கு களம் அமைத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத தரவு நுகர்வு, பரந்த பயனாளிகள் தளம், கொள்கைக்கு உகந்த சூழல் ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்தியா தொடர்ந்து தொழில்துறை வளர்ச்சி மற்றும் ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறது. இன்று இந்தியா 6 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் 4-ஜி மற்றும் சுமார் 4.42 லட்சம் கிராமங்களில் 5 ஜி பிடிஎஸ் என 99% இடத்தைப் பிடித்துள்ளது.

உலகளாவிய இணைப்பை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பில் இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்துவதற்கும் உலகத் தரம் வாய்ந்த தொலைத் தொடர்பு சூழல் அமைப்பை உருவாக்க டிஓடி உத்திப்பூர்வ சர்வதேச பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்புகளை நிறுவி வருகிறது. இது புதிய வணிக முயற்சிகளை ஈர்ப்பதற்கும், உலகளாவிய தலைவர்களுடன் பங்கேற்புகளை உருவாக்குவதற்கும், உள்நாட்டு ஸ்டார்ட்அப்களை வளர்ப்பதற்கும், புதுமைகளை இயக்குவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கவும், உலகளாவிய தொலைத்தொடர்பு அளவில் அதன் தலைமை நிலையை பாதுகாக்கவும் உதவியுள்ளது.

டிசம்பர் 23-ம் தேதி துபாயில் நடைபெற்ற உலக வானொலி மாநாட்டில் இந்தியாவின் தொலைத் தொடர்பு மற்றும் விண்வெளித் துறைகளின் பலன்களைப் பெறுவதற்காக இந்தியா பல்வேறு முடிவுகளை மேற்கொண்டது.

திவாஹர்

Leave a Reply