தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவிலான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மிகவும் அபாயகரமான 9 தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டது.
இந்த 9 தொழிற்சாலைகளும் கீழ்க்காணும் 6 மேலாண்மை நிறுவனங்களின் கீழ் செயல்படுகின்றன. அவைகள் ஸ்டெர்லைட், பிபிசிஎல், ஜஒசிஎல், ஸ்பிக், எஸ்.எச்.வி., எல்.பி.ஜி, டி.சி.டபில்யு என ஆறு தொழிற்சாலைகள் ஆகும்.
இந்த தொழிற்சாலைகளில் ஆபத்தை விளைவிக்கும் அதிகபட்ச வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஏதேனும் தீ விபத்து, விஷவாயு கசிவு போன்ற அவசரகால சூல்நிலையில் மேற்குறிப்பிட்ட 6 நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் தங்களது பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த பாதுகாப்பு மேம்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் முன்னிலையில் மேற்குறிப்பிட்ட 6 நிறுவனங்களும் கையெழுத்திட்டன.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சென்னை சி.ஞானசேகர பாபுராவ், கூடுதல் இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மதுரை ஏ.சீனிவாசன், இணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தூத்துக்குடி வி.ஏ.அப்பாவு சாமராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-பி.கணேசன் @ இசக்கி.