காப்பீட்டுத் துறைக்கு இடையே ஆழமான புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், அனைத்து குடிமக்களுக்கும், ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்கள் மூலம் மலிவு விலையில் ஆயுஷ் சுகாதாரத்தை வழங்குவதற்கும், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், பொது காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாக தலைமைக் குழுக்கள் மற்றும் ஆயுஷ் மருத்துவமனைகளின் உரிமையாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உணர்திறன் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தத் திட்டம் புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நாளை நடைபெறும். இந்தத் திட்டம் பொதுமக்களுக்கு ஆயுஷ் சிகிச்சைகளின் அணுகலை மேம்படுத்துவதையும், நாடு முழுவதும் முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்தியாவில் காப்பீட்டுத் தொகைக்காக பொது மற்றும் தனியார் ஆயுஷ் மருத்துவமனைகளை பட்டியலிடுவதற்கும் இது உதவுகிறது.
சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் ஆயுஷ் சிகிச்சைகளை முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்குத் தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் கொள்கை ஆதரவு குறித்து இந்தத் திட்டம் விவாதிக்கும் . சவால்கள் மற்றும் வாய்ப்புகள் இரண்டையும் எதிர்கொள்ள முக்கிய பங்குதாரர்களிடையே உரையாடலுக்கு வழிவகுக்கும். ஆயுஷ் துறையில் காப்பீடு பாதுகாப்பு, நிலையான சிகிச்சை வழிகாட்டுதல்கள், காப்பீட்டுத் துறைக்கான ஐசிடி குறியீடுகள், காப்பீட்டுத் துறையில் ஆயுஷ் ஊடுருவல், ஆயுஷ் மருத்துவமனையின் எதிர்காலம் ஆகியவை விவாதத்தில் உள்ள மற்ற முக்கிய பிரச்சினைகள் ஆகும்.
ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா, ஆயுஷ் அமைச்சகத்தின் காப்பீட்டுக்கான நிபுணர்களின் முக்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் பெஜோன் குமார் மிஸ்ரா, ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர் டாக்டர் கௌஸ்துபா உபாத்யாயா, ஆயுர்வேத மருத்துவமனையின் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் ஏ.ரகுத் , ஆயுர்வேத மருத்துவமனையின் ராஜீவ் வாசுதேவன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வார்கள்.
எம்.பிரபாகரன்