ரெமல் புயல்: மேற்கு வங்க கடற்கரை பகுதியில் மத்திய மற்றும் மாநில முகமைகளுடன் இந்தியக் கடலோரக் காவல்படை ஒருங்கிணைந்து செயல்பட்டு கடலில் உயிர் மற்றும் சொத்துகள் இழப்பைத் தடுத்துள்ளது.

ரெமல்’ புயலால் ஏற்பட்ட சூழ்நிலையை வெற்றிகரமாக சமாளிக்க இந்தியக் கடலோரக் காவல்படை மத்திய மற்றும் மாநில முகமைகளுடன் முன்மாதிரியான முறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டது. இந்தப் புயல் மே 22 அன்று குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகி மே 26 மற்றும் 27 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளில் கரையைக் கடந்தது. கரையைக் கடப்பதற்கு முன்பு  அது தீவிரமடைந்தது.

கடலோரக் காவல்படை முன்கூட்டியே முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல்வேறு மத்திய மற்றும் மாநில நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை உறுதி செய்து செயல்பட்டது. இதன் விளைவாக கடலில் உயிர்  அல்லது சொத்து இழப்பு ஏற்படவில்லை. புயலைக் கருத்தில் கொண்டு, கடலோரக் காவல்படை கப்பல்கள்  கண்காணிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. ஹால்டியா  மற்றும் பாரதீப்பில் உள்ள கடலோரக் காவல்படையின் மையங்ளில் இருந்து சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் விடுக்கப்பப்பட்டன. மீன்பிடிப் படகுகள் மற்றும் வணிகக் கப்பல்களுக்கு எச்சரிக்கைத் தகவல்கள் அனுப்பப்பட்டன.

தீவிரப் புயல் கரை கடந்ததைத் தொடர்ந்து, வரத் என்ற கடலோரக் காவல்படை கப்பல் உடனடியாக பாரதீப்பிலிருந்து  புறப்பட்டது. கூடுதலாக, இரண்டு  டோர்னியர் விமானங்கள் புவனேஸ்வரில் இருந்து புறப்பட்டு வடக்கு வங்காள  விரிகுடாவில்  விரிவான  கண்காணிப்பை  மேற்கொண்டன.

எம்.பிரபாகரன்

Leave a Reply