தென் சீனக் கடலில் இந்திய கடற்படையின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக புருனே நாட்டின் முரா பகுதிக்கு இந்தியக் கடற்படைக் கப்பல் கில்டன் பயணம் மேற்கொண்டது. இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.
இந்தப் பயணத்தின் போது துறைமுக நிர்வாகத்தில் தொழில்முறை தொடர்புகள், இருதரப்பு கடல்சார் பயணங்கள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் குறித்த கலந்துரையாடல்கள் இருநாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்றன. கில்டன் கப்பலை புருனே கடற்படை வீரர்கள் பார்வையிடுவதற்கும் அனுமதிக்கப்பட்டது.
இரு தரப்பு கடல்சார் கூட்டுப் பயிற்சியிலும் கில்டன் கப்பல் பங்கேற்றது. இதில் கடற்படை உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
திவாஹர்