இந்தியக் கடலோரக் காவல்படையின் முதலாவது அதிநவீன ரோந்துக் கப்பலின் கட்டுமானப் பணி இன்று தொடங்கியது.

இந்தியக் கடலோரக் காவல்படையின் முதலாவது அதிநவீன ரோந்துக் கப்பலின் கட்டுமானப் பணி மும்பையில் உள்ள மசகான்  கப்பல் கட்டும் நிறுவனத்தில் இன்று (31.05.2024) தொடங்கியது.  இந்த நிகழ்வில் இந்தியக் கடலோரக் காவல் படை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தியக் கடலோரக் காவல் படைக்கு ரூ.1,614.89 கோடி செலவில் அதிநவீன 6 ரோந்துக்  கப்பல்களைக் கொள்முதல் செய்ய மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் 2023 டிசம்பரில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்தக் கப்பல் 2 டீசல் எஞ்சின்களைக் கொண்டிருப்பதோடு மணிக்கு அதிகப்பட்சம் 23 நாட்டிக்கல்  மைல்  வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர் வசதியைக் கொண்டிருக்கும் இந்தக் கப்பல் விரைவான கண்காணிப்புத் திறனைப் பெற்றிருக்கும். பன்னோக்கு ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு, தொலைதூரத்திலிருந்து இயக்கவல்ல மீட்புப் படகு ஆகியவையும் இதன் சிறப்பு அம்சங்களாகும். இந்தக் கப்பல் 2027, மே மாதத்தில் இந்தியக் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்படும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply