வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் தூய்மை இருவார விழாவை நடத்தியது.

வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் 2024 மே 16 முதல் 31 வரை தூய்மை இருவார விழாவை நடத்தியது. இதையொட்டி, இந்த அமைச்சகத்தின் அலுவலக அறைகள், பொது இடங்கள் ஆகியவற்றைத் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து  தேவைப்படாத ஆவணங்கள் அகற்றப்பட்டன. ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீட்டுக்குள் வைத்து வளர்க்கப்படும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தூய்மை இருவார விழாவின் நிறைவு நாளான இன்று  கட்டுரைப் போட்டி, சுவரொட்டி உருவாக்கும் போட்டி, முழக்கங்கள் எழுதும் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. தூய்மை இயக்கத்தைச் சிறப்பாக செயல்படுத்திய 3 பிரிவுகள் அங்கீகரிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பேசிய வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சக செயலாளர், தூய்மையை வாழ்க்கை முறையாகக் கொள்ள வேண்டும் என்றும் அன்றாடப் பணியாக பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்தத் தூய்மை இருவார விழாவையொட்டி, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply