காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் கப்பற்படை வீரர்களுக்கான பயிற்சிக் கப்பல் கட்டுமானப் பணி இன்று (03.06.2024) தொடங்கியது. இந்தத் தொடக்க நிகழ்வுக்கு போர்க் கப்பல் உற்பத்தி மற்றும் கொள்முதலுக்கான உதவி கட்டுப்பாட்டாளர் ரியர் அட்மிரல் சந்தீப் மேத்தா தலைமை தாங்கினார். எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டுமான வணிகப் பிரிவுத் தலைவர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் ஜி கே ஹரீஷ், கப்பற்படை மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உள்நாட்டிலேயே கப்பல் கட்டுவதற்கான இந்திய கப்பல் படையின் தொடர்ச்சியான முயற்சிகளின் இது மற்றொரு முக்கிய மைல் கல்லாக விளங்குகிறது. இந்தக் கப்பல், கப்பல் படை வீரர்களின் அடிப்படைப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நட்பு நாடுகளின் கப்பல் படை வீரர்கள் பயிற்சிப் பெறுவதற்கும் இது பயன்படுத்தப்படும்.
இது போன்று 3 கப்பல்களை உள்நாட்டிலேயே வடிவமைத்துக் கட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் எல் அண்ட் டி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
எம்.பிரபாகரன்