உணவு தானியங்களின் மொத்த உற்பத்தி 3,288.52 லட்சம் மெட்ரிக் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சராசரி உணவு தானிய உற்பத்தியைவிட 211.00 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.

2023-24-ம் ஆண்டுக்கான முக்கிய வேளாண் பயிர்களின் 3-வது  முன்கூட்டியே கணிப்பு அறிக்கையை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த வேளாண் ஆண்டிலிருந்து, ரபி பருவத்தில் இருந்து கோடை காலம் பிரிக்கப்பட்டு, மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, பரப்பளவு, உற்பத்தி மற்றும் மகசூல் ஆகியவற்றின் இந்த முன்கூட்டிய மதிப்பீடுகளில் காரீஃப், ரபி மற்றும் கோடைக்காலம் ஆகியவை அடங்கும்.

இந்த அறிக்கை மாநில வேளாண் புள்ளியியல் அமைப்பிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்தக் கணிப்பு அறிக்கை முதன்மையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

உணவு தானியங்களின் மொத்த உற்பத்தி – 3,288.52 லட்சம் மெட்ரிக் டன், அரிசி 1,367 லட்சம் மெட்ரிக் டன், கோதுமை 1,129 லட்சம் மெட்ரிக் டன், சோளம் 356 லட்சம் மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 174.08 லட்சம் மெட்ரிக் டன், துவரம் பருப்பு 33.85 லட்சம் மெட்ரிக் டன் உள்ளிட்டவை.

‌திவாஹர்

Leave a Reply