நாடு முழுவதும் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, உத்கர்ஷ் சிறு நிதி வங்கி ஆகியவற்றின், 1,128 கிளைகளில் பாதுகாப்புத் துறையின் ஓய்வூதியதாரர்களுக்கான (ஸ்பார்ஷ்) சேவை மையங்களை அமைக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புக் கணக்குத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் கடைக்கோடியில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பாக ஸ்பார்ஷ் இணைப்பைப் பெறுவதற்கு தொழில்நுட்ப வசதி இல்லாத தொலைதூர பகுதியில் உள்ளவர்களுக்கு தொடர்பு வழங்குவதை உறுதி செய்யும்.
இத்தகைய ஓய்வூதியதாரர்களின் குறைகளைப் பதிவு செய்வது, டிஜிட்டல் அடிப்படையில் வருடாந்தர அடையாளப் பதிவு, தரவு சரிபார்த்தல் ஆகியவற்றுக்கு இந்த சேவை மையங்கள் பயனுடையதாக இருக்கும். இந்த மையங்களை அணுகுவதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேணடியதில்லை. இங்கு குறைந்த சேவைக் கட்டணம் பாதுகாப்புக் கணக்குத் துறையால் மையங்களுக்கு வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தங்களையடுத்து தற்போது நாடு முழுவதும் 15 வங்கிகளின் 26,000-க்கும் அதிகமான கிளைகளில் ஸ்பார்ஷ் சேவைகள் கிடைக்கும். பாதுகாப்புக் கணக்குத் தொகையால், தனியாக செயல்படுத்தப்படும் 199 சேவை மையங்கள் நாடு முழுவதும் உள்ள 3.75 லட்சம் பொது சேவை மையங்கள் ஆகியவற்றுடன் கூடுதலாக இந்தப் புதிய சேவை மையங்கள் செயல்படும். திறமையாகவும், பொறுப்போடும், வெளிப்படைத் தன்மையோடும் பாதுகாப்புத் துறையினரின் ஓய்வூதியங்களை நிர்வகிப்பதில் இது ஓர் அடிப்படையான மாற்றமாகும்.
திவாஹர்