கல்வித் துறையில் தரமான மாற்றங்களை ஏற்படுத்தும் தமது உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் வலியுறுத்தினார்.

கல்வித் துறையில் தரமான மாற்றங்களுக்கான தனது உறுதிப்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கியூ.எஸ் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் செயல்திறன் மேம்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கியூ.எஸ் உலகப் பல்கலைக்கழகப் தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்களின் செயல்திறனில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து கியூ.எஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர் திரு நுன்சியோ குவாக்கரெல்லியின் பதிவிற்கு பதிலளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“கடந்த தசாப்தத்தில், கல்வித் துறையில் தரமான மாற்றங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். இது கியூ.எஸ் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் பிரதிபலிக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்குப் பாராட்டுகள். இந்தக் காலகட்டத்தில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க இன்னும் அதிகமாகப் பணியாற்ற விரும்புகிறோம்.”

திவாஹர்

Leave a Reply