3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோதி; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நரேந்திர மோதி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி இன்றிரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார். அவருடன், முதல்கட்டமாக 30 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தனிப் பெரும்பான்மை (272) கிடைக்கவில்லை. அதேநேரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 293 இடங்களில் வென்று ஆட்சியை 3வது முறையாக தக்கவைத்துக் கொண்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட திரவுபதி முர்மு ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி பதவியேற்று கொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பிரதமராக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply