ஐ.என்.எஸ். ராஜாளியில் கடற்படை விமானிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு.

தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் உள்ள கடற்படை விமான தளத்தில் 102- வது ஹெலிகாப்டர் மாற்று பாடத்திட்ட  பட்டமளிப்பு மற்றும் 4 வது அடிப்படை ஹெலிகாப்டர் மாற்று பாடத்திட்ட  முதல் கட்டப் பயிற்சியின் நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூன் 07  அன்று ஒரு பயிற்சி நிறைவு  அணிவகுப்பு நடைபெற்றது.

3-வது பாடத்திட்டத்தின்  மூன்று அதிகாரிகள் உட்பட 21 அதிகாரிகளுக்கு கிழக்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் மதிப்புமிக்க “கோல்டன் விங்ஸ்” விருது வழங்கினார்.

இந்திய கடற்படையின் அனைத்து ஹெலிகாப்டர் விமானிகளும் படித்த இந்திய கடற்படை விமானப் படைப்பிரிவு 561 இல் கடுமையான பறக்கும் பயிற்சி மற்றும் தரைப் பயிற்சியை உள்ளடக்கிய 22 வார தீவிர பயிற்சித் திட்டத்தின் வெற்றிகரமான முடிவை இந்த நிறைவு  அணிவகுப்பு குறித்தது.

பாலின உள்ளடக்கம் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டிய அனாமிகா பி ராஜீவ் ‘முதல் பெண் கடற்படை ஹெலிகாப்டர் பைலட்’ பட்டம் பெற்று வரலாறு படைத்தார். லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த முதன் முதலாக  நியமிக்கப்பட்ட கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் ஜம்யாங் சேவாங், தகுதிவாய்ந்த ஹெலிகாப்டர் பைலட்டாக வெற்றிகரமாக பட்டம் பெற்றார்.

பறப்பதில் மெரிட் வரிசையில் முதலிடம் பிடித்த பயிற்சி விமானிக்கான எஃப்.ஓ.சி.ஐ.என்.சி., கிழக்கு கடற்படை கட்டளை சுழல் கோப்பை லெப்டினன்ட் குர்கிரத் ராஜ்புத்துக்கு வழங்கப்பட்டது. மைதான பாடங்களில் மெரிட் வரிசையில் முதலிடம் பிடித்ததற்காக சப் லெப்டினன்ட் குண்டே நினைவு புத்தக பரிசு லெப்டினன்ட் நிதின் சரண் சதுர்வேதிக்கு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த ஆர்டர் ஆஃப் மெரிட்டில் முதல் இடத்திற்கான கேரள ஆளுநர் சுழற்கோப்பை லெப்டினன்ட் தீபக் குப்தாவுக்கு வழங்கப்பட்டது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக வளமான பாரம்பரியத்தைக் கொண்ட இந்த ஹெலிகாப்டர் பயிற்சிப் பள்ளி, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த 849 விமானிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. ஹெலிகாப்டர் பயிற்சிப் பள்ளி அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளியில் அமைந்துள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply