பிரதமர் நரேந்திர மோதி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதியின் 17-வது தவணையை விடுவிப்பதற்கான தமது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். விடுவிக்கப்படும் ரூ.20,000 கோடி நிதியின் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
கோப்பில் கையெழுத்திட்ட பின்னர் பிரதமர் திரு மோடி பேசிய போது,
எங்களது அரசு விவசாயிகள் நலனில் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. எனவே, பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பதாகும். வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்” என்று கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா