சென்னை, சிஎஸ்ஐஆர் வளாகத்தில் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 60-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.

சிஎஸ்ஐஆர்-கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம் சிஎஸ்ஐஆர் தனது 60-வது நிறுவன தினம் மற்றும் வைர விழா ஆண்டின் தொடக்கவிழாவை மிகுந்த உற்சாகத்துடன் 10 ஜூன் 2024 அன்று சென்னை, சிஎஸ்ஐஆர் வளாகத்தில் கொண்டாடியது. இந்நிகழ்ச்சிக்கு சிஎஸ்ஐஆர் இயக்குநர் மற்றும் சிஎஸ்ஐஆர் சென்னை வளாக ஒருங்கிணைப்பு இயக்குநர், முனைவர் என். ஆனந்தவல்லி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக நிதி ஆயோக் உறுப்பினர் முனைவர் விஜய் குமார் சரஸ்வத் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் முனைவர் எஸ். கோமதிநாயகம் கலந்து கொண்டார்.

முனைவர் ஆனந்தவல்லி, தலைமை விருந்தினரும் சிறப்பு விருந்தினருக்கும் வரவேற்பு நல்கி, சிஎஸ்ஐஆர் -இன் 60-வது நிறுவனர் தின நிகழ்வில் அனைத்து பணியாளர்களையும் வாழ்த்தினார். வரவேற்புரை நிகழ்த்திய இயக்குநர் சிவில் இன்ஜினியரிங் ஒரு வாழ்க்கை முறை என்றும், பூமி, காற்று, நெருப்பு, தண்ணீர், விண்வெளி ஆகிய ஐந்து கூறுகளையும் கட்டமைப்பு அறிவியலுடன் ஒப்பிட்டுப் பேசினார். 1965 ஆம் ஆண்டு ஜூன் 10 அன்று சென்னையில் ஒரு தனிப்பட்ட தேசியப் பிராந்திய மையத்தை நிறுவுவதற்கான முனைப்புடன் சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி நிறுவப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். அதன் பின்னரான சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சியின் பயணம் மக்களுக்கான முக்கியமான சாதனைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பை வடிவமைக்க ஆற்றிய பங்கை விவரித்தார். மேலும், சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அவர் விவரித்தார்.

இப்போது கட்டமைப்பின் ஆரோக்கியக் கண்காணிப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு, பேரழிவு குறைப்பு, நிலையான கட்டமைப்புகளுக்கான மேம்பட்ட பொருட்கள், சிறப்பு மற்றும் பல்வேறு செயல்திறன் கொண்ட கட்டமைப்புகள், ஆற்றல் உள்கட்டமைப்பு மற்றும் கடலோர கட்டமைப்புகள் ஆகிய ஆறு முக்கிய துறைகளில் மையமாக உள்ளது என்றும் சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சியில் உள்ள விஞ்ஞானிகள் கட்டமைப்புக் கலைவியல் துறையில் நிலையான விதிமுறைகள் மற்றும் குறியீடுகள் உருவாக்கத்தில் பல குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

முனைவர் கோமதிநாயகம், சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி வைர விழா தொடர் முதல் சொற்பொழிவினை நிகழ்த்தினார். அவரது உரையில், சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சியுடன் தனது தொடர்பை நினைவுகூர்ந்தார். அவர் “ஆற்றல் பொறியியல் கட்டமைப்புகளில் உருவாகிவரும் பரிமாணங்கள்” குறித்து உரையாற்றினார். 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உருவாக்க நாட்டின் உறுதிப்பாட்டையும், அந்த இலக்கை அடைவதில் கட்டமைப்பு பொறியாளர்களின் பங்கையும் விளக்கினார்.

முனைவர் சரஸ்வத், சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி வைர விழா ஆண்டில் நுழைந்ததற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பேராசிரியர் ஜி.எஸ். ராமசாமி நினைவுரையை வழங்கி, கட்டமைப்புக் பொறியியல் முன்னேற்றங்களைப் பற்றி உரை நிகழ்த்தினார். நாட்டின் உள்கட்டமைப்புப் பொறியியல் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் குறியீடாகும் என்பதையும், எனவே உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல் பேரழிவுகளுக்கு எதிரான பொதுமக்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

தலைமை விருந்தினரான முனைவர் சரஸ்வத், வைர விழா இலச்சினையை (லோகோ) வெளியிட்டு, கட்டமைப்புக் கலைவியல் இதழின் ஆன்லைன் சமர்ப்பிப்பு தளத்தைத் தொடங்கி, சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சியின் திட்டங்களின் தொகுப்புத்தொகுப்பை வெளியிட்டார்.

சிறப்பு விருந்தினரான முனைவர் எஸ். கோமதிநாயகம், சரியான உள்கட்டமைப்புக்களின் கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் முன்னெச்சரிக்கை பராமரிப்பு (i-MAP) பற்றிய சர்வதேச மாநாட்டின் சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி வைர விழா மாநாட்டு இதழை வெளியிட்டார்.

திவாஹர்

Leave a Reply