எழுத்தாளர் பாமாவிற்கு 2024ம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இலக்கிய துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒளவையார் விருது வழங்கினார். கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல். தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசால் “ஔவையார் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அவ்வகையில், தமிழ்நாடு அரசின் 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதிற்கு இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும். முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply