தமிழக அரசு – கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்தவர்களை கால தாமதம் செய்யாமல் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக சரியாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முறையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

காரணம் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என சட்ட விரோத செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

சமூக விரோதிகளால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக புதுக்கோட்டை இலுப்பூரில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை – தடுக்கும் பணியில் ஈடுபட்ட கோட்டாட்சியரை லாரி ஏற்றி கொல்ல மேற்கொண்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணல் திருட்டை தடுப்பதற்காக சென்ற வருவாய் கோட்டாட்சியர் உட்பட அவருடன் சென்ற அரசு அதிகாரிகள் மீது சமூக விரோதிகள் மினி லாரியை ஏற்றி கொல்ல முயற்சி செய்தபோது அரசு அதிகாரிகள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

காவல்துறை கால தாமதம் செய்யாமல் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஆனால் தமிழக தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியே. காரணம்

சமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் போதுமானதாக இல்லை. மணல் திருட்டையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

சமூக விரோதிகளின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் துணையாக இருக்கக்கூடாது.

சர்வ சாதாரணமாக குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு காவல்துறையின் மீதும், தமிழக அரசின் மீதும் பயமே இல்லாத நிலை தமிழகத்தில் உள்ளது.

எனவே தமிழக அரசு பொது மக்களுக்கு மட்டுமல்ல அரசு அதிகாரிகளுக்கும் அச்சமும், பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக தனிக்கவனம் செலுத்தி, தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply