மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், நிகர்நிலைப் பல்கலைக்கழகமான எஸ்-வியாசாவுடன் இணைந்து, பெங்களூருவில் உள்ள அந்த பல்கலைக்கழக வளாகத்தில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சுய முன்னேற்றம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு யோகா என்ற கருப்பொருளுடன் விண்வெளித்துறையினருக்கான யோகா மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தியது.
விண்வெளி வீரர்கள் உட்பட அத்துறை சார்ந்த நிபுணர்களை இந்த மாநாடு ஒருங்கிணைத்தது. இதில் யோகா தொடர்பான பல்வேறு போட்டிகள் மற்றும் பயிற்சிகளும் இடம் பெற்றன.
மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் டாக்டர் ராகவேந்திர ராவ், சர்வதேச யோகா தினத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். யோகா பயிற்சியால் ஏற்படும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்தும் அவர் விளக்கினார்
திவாஹர்