இந்திய பல்நோக்கு போர்க்கப்பலான ஐஎன்எஸ் ஷிவாலிக் உலகின் மிகப்பெரிய கடற்படை பயிற்சியான ரிம் ஆஃப் தி பசிபிக் (ரிம்பாக்) பயிற்சியில் பங்கேற்க ஹவாயில் உள்ள பேர்ல் ஹார்பர் சென்றடைந்துள்ளது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே இருதரப்பு பயிற்சியான ஜிமெக்ஸ் 24 பயிற்சியை நிறைவு செய்த பின்னர் ஐஎன்எஸ் ஷிவாலிக் வியாழனன்று பேர்ல் ஹார்பருக்குப் புறப்பட்டது.
2024 ஜூன் 27 முதல் ஜூலை 07 வரை நடைபெறும் இந்த ரிம்பாக் -24 பயிற்சியின் துறைமுகக் கட்டத்தில் பல கருத்தரங்குகள், பயிற்சி நிகழ்வுகள், விவாதங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும.
இந்தப் பயிற்சியில் பன்னாட்டு கடற்படைகளின் சிறப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கைகள் இடம்பெறும். நீரிலும் நிலத்திலும் பங்கேற்கும் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளும் இதில் இடம் பெறும். அமெரிக்க கடற்படை தலைமையில், சுமார் 29 நாடுகள் பல, இந்த ஆண்டு பயிற்சியில் பங்கேற்கின்றன.
ஐஎன்எஸ் ஷிவாலிக் கப்பல் உள்நாட்டிலேயே வடிவமைத்துக் கட்டப்பட்ட போர்க்கப்பல் ஆகும்.
திவாஹர்