ஹைதராபாத், பேகம்பேட்டையில் உள்ள விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயுதப்பயிற்சிப் பள்ளியை, விமானப்படை தளபதி ஏர்சீப் மார்ஷல் வி ஆர் செளத்ரி, 2024, ஜூலை 1 அன்று தொடங்கி வைத்ததன் மூலம், இந்திய விமானப்படை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2022-ல் இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கான ஆயுதப் பயிற்சிப் பிரிவின் கிளையை திறக்க அனுமதியளிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக இந்தப் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையை, எதிர்காலத்திற்கேற்ற படை பலம் வாய்ந்த பிரிவாக மாற்றியமைப்பதே இதன் நோக்கம். இந்தப் புதிய பயிற்சிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பது, இந்தியாவின் ஆயுதப்படைகள், குறிப்பாக விமானப்படை மேலும் வேகத்துடன் செயல்பட உதவிகரமாக இருக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய விமானப்படை தளபதி வி ஆர் செளத்ரி, புதிய ஆயுதப்பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்பட்டிருப்பது விமானப்படையின் போர்த் திறனை மேம்படுத்துவதுடன், தரையிலிருந்து நிர்வகிக்கப்படும் ஆயுத முறைகளை கையாள்பவர்களை ஒரு குடையின் கீழ், கொண்டு வரும் என்று தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா