இந்திய மொழிகளில் தேசிய அளவிலான எழுத்துப் போட்டிக்கான மேடையை உருவாக்குவது குறித்த கூட்டத்திற்கு சஞ்சய் குமார் தலைமை தாங்கினார்.

இந்திய மொழிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான எழுத்துப் போட்டிகளை நடத்துவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்க, கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் 2024,  ஜூன் 28 அன்று ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் கல்வித் துறை, சிபிஎஸ்இ, என்பிடி, என்சிஇஆர்டி, நவோதயா வித்யாலயா சமிதி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், 9 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு மூலம் இந்த முயற்சிகளை ஒரு கட்டமைப்பாக ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை திரு சஞ்சய் குமார் வலியுறுத்தினார். மதிப்பீட்டு செயல்பாட்டில் ஆதரவளிக்க மொழி வல்லுநர்களைக் கோர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பள்ளிகள் மாநில / மாவட்ட அளவில் பல்வேறு மொழிகளில் போட்டிகளை ஏற்பாடு செய்யும். சிபிஎஸ்இ தேசிய அளவிலான போட்டிக்கு பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் என்றும் அவர் கூறினார். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் தேசிய புத்தக அறக்கட்டளையும் இணைந்து பிரபலமான பிராந்திய மொழிப் புத்தகங்களை அடையாளம் கண்டு தேசிய டிஜிட்டல் நூலகத்தில் சேர்க்க வேண்டும் என்று திரு சஞ்சய் குமார் வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply