அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் மின்துறை ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமை தாங்கினார். முதலமைச்சர் திரு பெமா கண்டு, துணை முதலமைச்சர் திரு சௌனா மெயின், மத்திய மின்துறை செயலாளர் திரு பங்கஜ் அகர்வால், அருணாச்சலப் பிரதேச தலைமைச் செயலாளர் திரு தர்மேந்திரா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு மனோகர் லால், நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில், மத்திய அரசு இந்தப் பகுதியின் தேவைகளை மிகவும் உணர்ந்து வருகிறது என்று கூறினார். சிறந்த போக்குவரத்து, மேம்பட்ட கட்டமைப்பு, மக்கள் நலனுக்கான பணிகள் ஆகியவற்றை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். நாட்டின் மொத்த புனல் மின் உற்பத்தியில் அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 38% (சுமார் 50 ஜிகாவாட்) உள்ளது என்றும், இது அனைத்து மாநிலங்களையும் விட மிக அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் நீர்மின் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவதற்கு ஈடுசெய்வதாக காடு வளர்ப்பு நிலம் இருப்பது இன்றியமையாதது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான நடைமுறைகளையும், நுகர்வோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மின் கட்டணப் படிவத்தையும் எளிமைப்படுத்த வலியுறுத்தப்பட்டது.
மேலும், 2 மாதங்களுக்கு ஒரு முறை தாமாகவே மின் கணக்கீடு செய்யும்முறை, செல்பேசி செயலி மூலம் மின் கட்டண பில் தயார் செய்வது ஆகிய தெரிவுகளை நுகர்வோருக்கு வழங்கவும் அவர் பரிந்துரைத்தார்.
எம்.பிரபாகரன்