துரந்த் கோப்பை போட்டிக்கான கோப்பைகளை குடியரசுத்தலைவர் வெளியிட்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் இன்று (ஜூலை 10, 2024) நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 துரந்த் கோப்பை போட்டியின் கோப்பைகளை வெளியிட்டார். துரந்த் கோப்பை, குடியரசுத்தலைவர் கோப்பை, சிம்லா டிராபி ஆகியவை இதில் அடங்கும்.

நிகழ்ச்சியில் சுருக்கமாக உரையாற்றிய குடியரசுத்தலைவர், உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் கால்பந்தும் ஒன்று என்று கூறினார். தொழில்முறை கால்பந்து வீரர்கள் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு முன்னால் விளையாடும்போது, வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் உற்சாகம் பன்மடங்கு அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்..

2024 துரந்த் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் குடியரசுத்தலைவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். வீரர்கள் வெற்றி பெற்றாலும், தோற்றாலும், விளையாட்டில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும் என்றும், அவர்கள் மற்ற அணிகளை மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சில நேரங்களில், விளையாட்டில் தூண்டுதல்கள் மற்றும் ஆர்வங்கள் உள்ளன. ஆனால் வீரர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், விளையாட்டில் சிறந்ததைச் செய்யவும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். அனைத்து வீரர்களும் உறுதியுடனும் விளையாட்டு உணர்வுடனும் விளையாடுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் கால்பந்து தரத்தை உயர்த்த அனைத்து கால்பந்து ரசிகர்களும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply