சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.1.11 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பண நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்காக்கிற்குப் பயணம் செய்ய  06.07.2024 அன்று 2 பயணிகள்  விமானத்தில் ஏறியபோது சுங்கத்துறையினர் இடைமறித்து அவர்களின் உடைமைகளை பறிசோதித்து விசாரணை நடத்தியபோது அமெரிக்க டாலர், சவூதி ரியால் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மதிப்பு ரூ.1.11 கோடியாகும். இந்த வெளிநாட்டு நோட்டுகளை இந்தியாவில் இருந்து கடத்த இவர்கள் முயற்சி செய்ததை அடுத்து இவர்களிடமிருந்து வெளிநாட்டுப் பண நோட்டுகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இரண்டு பயணிகளும் கைது செய்யப்பட்டு சென்னை புழலில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply