ஆசியா முழுவதும் இந்த 2012 வருடம் நடந்த வன்முறையினை படம் பிடிக்க சென்ற பத்திரிகையாளர்கள் 25 பேர் பலியாகியுள்ளனர். இதில் முதலாவதாக, பாகிஸ்தானில் நடந்த வன்முறையின் போது அதிகமாக 13 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பங்களாதேசில் 3 பேரும், நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலா இரு பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதி தான் ஆசியாவிலேயே அதிகம் வன்முறை நடக்கும் பகுதியாகும். இந்தியாவின் காஷ்மீர் பகுதியிலும் வன்முறைகள் நடப்பதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப்போர் நடந்த போது கூட ஊடகங்களின் செயல்பாடுகள் மிகக் மிகக் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
எஸ்.சதிஸ்சர்மா