ஊழல் வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா உள்பட 55 பேர் கைது! டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

OmprakasChautala

Omprakas Chautala

ஊழல் வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. உடனடியாக அவரை கைது செய்யவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தண்டனை விவரம் வரும் 22-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

அரியானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு முன்பு ஓம்பிரகாஷ் சதவுதாலாவின் தேசிய லோக் தள கட்சி ஆட்சி நடைபெற்றது. ஓம்பிரகாஷ் முதல்வராக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

  Ajay Chautala

Ajay Chautala

இதில் பெருமளவு முறைகேடு நடைபெற்றிருப்பதாக  ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. டெல்லியில் உள்ள கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஓம்பிரகாஷ் சவுதாலா, அஜய் சவுதாலா உள்பட 55 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

chautala1_0

தற்போது ஜாமீனில் வெளியில் உள்ள அவர்களை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டார். வரும் 22-ம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அவர்களை கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

எஸ்.சதிஸ்சர்மா

 

Leave a Reply