காதலுக்காக உயிர் துறந்த காதலர்கள் பற்றி வரலாற்றிலும், காவியங்களிலும் படித்திருக்கிறோம், சினிமாவிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் காதலிக்காக மாபெரும் சாம்ராஜ்யத்தையே ஒரு மன்னர் தியாகம் செய்திருக்கிறார் அவர் தான் எட்டாம் எட்வர்டு. இருபதாம் நூற்றாண்டில் இந்த அதிசயம் நடந்துள்ளது.
இங்கிலாந்து ராணியாக 64 ஆண்டுகள் பதவி வகித்து சாதனைப் படைத்த விக்டோரியா மகாராணியின் கொள்ளுப் பேரன் தான் இந்த எட்டாம் எட்வர்டு. இங்கிலாந்து மன்னராக இருந்த ஐந்தாம் ஜார்ஜ் 1936 ஜனவரி 20 ம் தேதி மரணம் அடைந்தார். பின்பு அவரது மகனான இந்த எட்டாம் எட்வர்டு மன்னரானார்.
எட்டாம் எட்வர்டுக்கும் வாலிஸ் சிம்சன் என்ற அமெரிக்க பெண்ணுக்கும் ஏற்கனவே காதல் இருந்து வந்தது. ஸ்பென்சர் என்ற கடற்கரை அதிகாரியை மணந்து விவாகரத்து செய்தவர் வாலிஸ். பின்னர் சிம்சன் என்ற செல்வந்தரை மணந்துகொண்டார். சிம்சனின் குடும்பம் பெரிய கப்பல் கம்பெனி நடத்தி வந்தனர். அந்த நிறுவனத்தின் லண்டன் கிளையை சிம்சன் நிர்வகித்து வந்தார்.
அப்போது எட்டாம் எட்வர்டு பட்டத்து இளவரசராக இருந்தார். அவர் ஒரு விருந்தில் வாலிஸை சந்தித்தார். வாலிஸின் அழகும், புத்திசாலிதனமும் அவரை கவர்ந்தன. இருவரும் நட்பு முறையில் அடிக்கடி சந்தித்தனர். நாளடைவில் அந்த நட்பு காதலாக மாறியது. வாலிஸிடம் தன் இதயத்தை எட்வர்டு பறிகொடுத்தார்.
“நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது” என்று எட்வர்டு வாலிஸிடம் அடிக்கடி கூறி வந்தார். இளவரசரின் காதல் உண்மையானது, உறுதியானது என்று வாலிஸ் புரிந்து கொண்டார். சிம்சனை விவாகரத்து செய்து விட்டு இளவரசனை திருமணம் செய்ய தீர்மானித்தார்.
இந்த சமயத்தில் தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மரணம் அடைந்தார். உடனே எட்வர்டு மன்னர் ஆனார். சில நாட்கள் சென்றன. வாலிஸை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக எட்வர்டு அறிவித்தார்.
அதை கேட்டு அரச குடும்பத்தினரும், பிரதமரும் அதிர்ச்சி அடைந்தனர். விவாகரத்து ஆன பெண்ணை நீங்கள் மணந்தால், அவளுக்கு ராணி என்ற அந்தஸ்து தர முடியாது. சிம்மாசனத்தில் உங்கள் அருகே அவர் அமர முடியாது. அவளுக்கு பிறக்கும் குழந்தை உங்களுக்கு பிறகு மன்னராகவும் ஆக முடியாது என்று எட்வர்டிடம் பிரதமர் ஸ்டான்லி பால்டுவின் தெரிவித்தார்.
அரசர் என்ற முறையில் இங்கிலாந்து கிருஸ்தவ சபையின் தலைவராகவும் எட்வர்டு இருந்தார். கிருஸ்தவ சபையும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
ஆனால் எட்வர்டு தன் முடிவில் உறுதியாக இருந்தார். காதலியா, மணிமகுடமா இரண்டில் ஒன்றை நீங்களே தீர்மானியுங்கள் என்று பிரதமரும், அரச குடும்பத்தினரும் கண்டிப்புடன் கூறினர்.
எனக்கு எனது காதலி தான் வேண்டும், மகுடம் தேவையில்லை என்று எட்டாம் எட்வர்டு அறிவித்தார். அவருடை இந்த அறிவிப்பு இங்கிலாந்து தேசத்தை மட்டுமல்ல, அகில உலகத்தையும் அதிர்ச்சி அடைய செய்தது. அவர் சொன்ன படியே 1936 டிசம்பர் 10ம் தேதி மன்னர் எட்டாம் எட்வர்டு முடி துறந்தார்.
அப்போது உலகின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி இங்கிலாந்து சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தன் காதலிக்காக அனைத்தையும் உதறி தள்ளி விட்டு சரித்திரத்தில் இடம் பெற்றார். அவருக்கு பதிலாக அவருடைய தம்பி ஆறாம் ஜார்ஜ் மன்னரானார்.
எட்வர்டு, வாலிஸ் திருமணம் 1937 ஜீன் மாதம் நடைபெற்றது. அப்போது எட்வர்டுக்கு வயது 42. வாலிஸ்க்கு வயது 40. இருவரும் 25 ஆண்டு காலம் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தினார்கள். எட்வர்டு 1972ம் ஆண்டு, தனது 74-வது வயதில் காலமானார். அதற்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து வாலிஸ் மரணம் அடைந்தார்.
அவர்கள் இம் மண்னை விட்டு மறைந்தாலும், அவர்கள் காதல் என்றும் மறையாது.
prescription strength anti inflammatory medications http://msdsrnd.com/index.php/moreal-monitoring-reporting-alerting/ http://www.locosxtkd.com/eventos/item/74-campus-juvenil-cat-cobertura-exclusiva-locosxtkd http://www.reemplazoprotesico.com.mx/academia/las-opciones-de-tratamiento-para-los-pacientes-con-placas-de-crecimiento-abierto-y-rupturas-del-lca-blog/ http://prawy.pl/48884-pawel-kukiz-do-po-i-pis-jestem-zakochany-w-europie-ale-widze-roznice-miedzy-miloscia-i-partnerstwem-a-prostytucja/ http://gitar-zone.ru/obzor-i-video/splin-tantsuy.html http://vutekpart.com/?attachment_id=413 http://ajansnar.com/index.php/haberler/54-narbim-sosyal-sorumluluk-projelerine-bir-yenisini-ekledi?limit=10&start=23880 http://luonbencon.com/dong-dao-hoc-ba-ba-di-ban-lon-con/ college of medicine phoenix