இன உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் அரசியல் நடத்த இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகின்றது!

 

       கபீர் ஹாசீம்

              கபீர் ஹாசீம்

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 நாட்டில் வாழ்க்கைச் செலவு உயர்வு, குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வு போன்ற பல்வேறு காரணிகளினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் இவ்வாறான நிலைமையில் இன உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் அரசியல் நடத்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

 அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகள் குறித்து பதவி வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

 அத்துடன் பதவிகளை பாதுகாப்பதற்காக மௌனம் காப்பது பொருத்தமானதல்ல எனவும், உண்மை நிலைமையை ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 ஆரம்பத்தில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது தற்போது வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்வியைத் தடுப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.

 அரசாங்கம் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் சிறுபான்மை இன எதிர்ப்பு கொள்கைகளை பின்பற்றி வருகின்றது இவ்வாறான நிலைமைகளே இனப் பிரச்சினை உருவாவதற்கு ஏதுவாக அமைந்தது என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply